Tuesday, December 29, 2009

சிலை வணக்கம் இஸ்லாத்தில் இல்லை ஏன்?

இதற்கு விடை கூறுமுன், ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்வது அவசியமாகிறது. முஸ்லிம்கள் கடவுளை “அல்லாஹ்” என்கின்றனர். அநேகம்பேர் “அல்லாஹ்” என்பது ஹிந்துக்களுக்கு பரமசிவன், மஹாவிஷ்ணுவைப்போல, பௌத்தர்களுக்கு புத்தரைப் போல, முஸ்லிம்களுக்கான கடவுள் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர். ஆனால் அல்லாஹ் என்பது அரபி மொழியில் “இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் படைத்து, பரிபாலித்து ஆண்டு கொண்டிருக்கும் பரம்பொருளாகிய இறைவன்” என்று பொருள்படும் ஒரு சொல்லாகும். உலகில் எந்த மூலையில் வாழும் முஸ்லிமாக இருந்தாலும், எந்த பாஷை பேசினாலும், கடவுள் அல்லது இறைவனைக் குறிக்க “அல்லாஹ்” என்ற பதத்தையே அவர்கள் உபயோகிக்கின்றனர். அல்லாஹ் என்ற பதத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால், இதற்கு பன்மை (அதாவது God, Gods கடவுள், கடவுள்கள்) என்பது கிடையாது. ஆண்பால், பெண்பால் (God, Goddess, பகவான், பகவதி) என்று பிரிக்கவும் முடியாது.

இனி...

குர்ஆனில் இறைவன் கூறுவதாவது:
நிச்சயமாக, நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ஆகவே என்னையே வணங்குவாயாக. என்னை (நினைவுகூர்ந்து) தியானிக்கும் பொருட்டு தொழுகை புரிவாயக! (அத்தியாயம் தாஹா 20-14)

வணங்குவதற்கான உரிமை அனைத்து மனிதருக்கும் மிக அடிப்படையானது, அதுபோன்றே ஒருவர் யாரை வணங்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பதைப் பொறுத்தது. ஆகவே யாரும் எவருடைய உரிமைக்கும் தடை போட முடியாது.

உண்மையில் கடவுள் எப்படி இருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள இயலாது, அவரைப் பற்றி அவரே வந்து சொன்னாலே ஒழிய. ஆகவே கடவுளை வணங்கும் விஷயத்தில் நாம் இன்னொருவர் துணை இல்லாமல் முடியாது. பிரச்சனை இங்குதான் வருகிறது.
இஸ்லாத்தின் கூற்றின்படி நம்மால் கடவுளை புரிந்து கொள்ள முடியும். எவ்வாறு கடவுளைப் புரிந்து கொள்ள முடியும்? அவர் ஒருவர் என்பதும் அவருடைய பெயர்களும் குணங்களும் நாம் மற்ற படைப்புகளுக்குத் தரும் குறுகிய வட்டத்தை விட்டும் மிகவும் உயர்ந்தது. அப்படியெனில், அந்த உண்மையான கடவுள் இருக்கிறாரே, அவரை மட்டும் தானே நாம் வணங்க வேண்டும்.

இஸ்லாம் கூறுகிறது: “படைக்கபட்ட எதுவும் வண்ணங்கப்படக் கூடாது. படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும்”.

“மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள் (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி உடையோராகலாம். (குர்ஆன் 2:21)

படைக்கப்ட்ட ஒன்றை வணங்குவதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது?
இதற்கு பதில்: படைத்த சக்தி ஒன்றுதான் வணங்குவதற்கும் தகுதி பெற்றது. வணங்குதல் என்பது சில சடங்குகளைச் செய்வதுடன் முடிந்து விடும் காரியமில்லை. அது மனித மனதிலிருந்து எழும் எண்ணங்களும் பிரார்த்தனைகளும். அந்த எண்ணம் நமது இதயத்துள்ளும் ஆன்மாவினுள்ளும் உள்ள ஒன்று. நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் நம்மைப் படைத்தவனை நோக்கி நாம் கையை உயர்த்துகிறோமே, அதுதான் வணக்கம் / வழிபாடு.

1. நான் யாரை நோக்கி எனது கையை உயர்தூக்கிறேனோ, அவர் எனது பிரார்த்தனையை செவிமடுப்பவராக இருக்க வேண்டும். வழிபாடு வெளிப்படுவது நாவலும் உடலாலும். அல்லாஹ் இந்த வழிபாட்டை அறிவதாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் குர்ஆன் கூறுகிறது
2. நாம் பிரார்த்திக்கும் கடவுள் நமது பிரார்த்தனைக்கு பதில் தருபவராகவும் இருக்க வேண்டும். அல்லாஹ் அதையும் செய்வதாக குர்ஆன் கூறுகிறது.
3. மனித அறிவு மிகவும் குறுகியது. ஆகவே நமக்கும் இவ்வுலகிற்கும் எது நன்மை பயக்கும் எது தீமை பயக்கும் என்பது கடவுளுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அதற்கேற்றவாருதான் நமது பிரார்தனையும் அவரால் நிறைவேற்றப்பட வேண்டும். இதையும் அல்லாஹ் ஒருவனால்தான் செய்ய முடியும் என குர்ஆன் கூறுகிறது.

கடவுள் ஸ்தானத்தில் வேறு ஒருவரையும் சேர்த்து வணங்கலாமா?
கடவுளை வணங்குவது போன்றே, அவரது இடத்தில் நமது தாய் அல்லது தந்தையை வைத்து வணங்கலாமா என்றால் அதுவும் கூடாது. உதாரணத்துக்கு, நாம் நமது தந்தைக்குத் தர வேண்டிய அதே மரியாதை மற்றும் சேவைகளை வேறு ஒருவருக்கு அளித்தால் அதை நமது தந்தை விரும்புவாரா? இன்னும் ஒருபடி மேலே போய், அதுபோன்றே ஒருவரின் மனைவி தனது கணவருக்குச் செய்யும் சேவைகளை மற்றவருக்கும் தர விரும்பினால் அதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? யாருக்கு என்ன மரியாதை என்பதை மிகவும் தெளிவாக இஸ்லாம் வரையறுத்துள்ளது.

ஆகவே கடவுளுக்கான மரியாதை மற்றும் வழிபாடுகளை வேறு ஒருவர்க்கு அளிக்க முடியாதல்லவா? அந்த நபர் ஒரு இறந்துவிட்ட அல்லது உயிரோடுள்ள மனிதனாகவோ அல்லது சிலையாகவோ இருந்தாலும் சரியே.
ஆகவே, படைக்கப்பட்ட ஒன்றை வணங்குவதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை, நமது தாய், தந்தை, இன்னும் உலக முஸ்லிம்கள் போற்றும் முகமது நபிகள் கூட இறைவனால் படைக்கபட்ட ஒருவர்தான். ஆகவே அவரைக்கூட யாரும் வணங்கக்கூடாது. அப்படி ஒருவர் செய்தால், அவர் ஒரு முஸ்லிம் அல்ல.

இறுதியாக, குர்ஆன் கூறுகிறது:
அவன்தான் அல்லாஹ், உங்கள் இறைவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. எல்லாப் பொருட்களையும் படைத்த படைப்பாளன் அவனே. ஆகவே அவனையே வழிபடுங்கள், அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன் (disposer of all affairs). (குர்ஆன் 6:102)

இதுதான் உண்மையான வழிபாடு!

இப்போது ஒரு நண்பர் கேட்கிறார்: அய்யா, நான் எனது மதத்தில் கடவுளாக நம்பப்படும் கடவுளின் சிலையை வணங்குகிறேன். நான் வணங்கும் கடவுள்தான் இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் படைத்ததாக எனது புனித நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் நம்புவதும் கடவுள்தான், நீங்கள் நம்புவதும் கடவுள்தான். ஆகவே இஸ்லாமிய மதத்தில் கூறப்படும் கடவுள்தான் உண்மையான கடவுள், அதன் வேதம்தான் உண்மையானது மற்றும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதை நான் எப்படி நம்புவது?

நல்ல கேள்வி. இதற்கான விடை இதோ:

ஒரு உதாரணத்திற்கு, பிரயணத்தில் தனது பெட்டியைத் தவறவிட்ட ஒருவருக்கு, காவல் துறையிடமிருந்து அழைப்பு வருகிறது. பெட்டி கிடைத்துவிட்டதாகவும், அதன் அடையாளங்களைச் சொல்லி அவர்தான் அதன் உரிமையாளர் என்று நிரூபித்துவிட்டு பெட்டியைப் பெற்றுச் செல்லுமாறு தகவல் கிடைத்தது. உண்மையான உரிமையாளரால்தான் அந்த்ப் பெட்டிக்குள் உள்ள பொருட்கள், அவற்றை அவர் வாங்கிய இடம் முதலிய விவரங்களைக் கூற முடியும்.

அதே போன்று, சிக்கலான ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளார் ஒரு அறிவியலார். ஆனால் இன்னொருவர் அது தாம் தான் வடிவமைத்தது என உரிமை கோருகிறார். இச்கிக்கலைத் தீர்க்க ஒரே வழி அதற்கான ஆதரங்களைச் சொல்வதுதான். உண்மையிலேயே வடிவமைத்த ஒருவருக்குத்தான் அந்த ரோபோவின் நாடி நரம்பெல்லாம் அத்துப்படியாகும்.

அது போன்றுதான், 1400 ஆண்டுகளுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹமது நபி அவர்களுக்கு இறைவனால் அருளுப்பட்ட திருகுர்ஆன், இந்த நூற்றாண்டு வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த பல அரிய அறிவியல் உண்மைகளை உடைக்கிறது. எந்த அறிவியல் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்தில், படைத்தவன் அல்லாது வேறு யாருக்கும் இந்த உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை..

குர்ஆன் கூறுகிறது:
நிச்சயமாக, உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துள்ளன. எவர் அவற்றை (கவனித்துப்) பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும். எவர் பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். (நபியே கூறுவீராக, இறைவனின் செய்தியை உங்களுக்கு எடுத்துரைப்பது அன்றி), நான் உங்களைக் காப்பவன் அல்ல. (குர்ஆன் 6:104)

1. பால்

நம்மில் அநேகம்பேர் பால் என்பது மாட்டின் ரத்தத்தில் இருந்து பிரிந்து வரும் பொருள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். (அண்ணாமலை படத்தின் ஒரு பாட்டில் கூட கவிஞர் அப்படித்தான் எழுதியிருக்கிறார்). ஆனால் அதுவல்ல உண்மை. இதோ, குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

நிச்சயமாக கால்நடைகளிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படிப்பினை உண்டு. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்த்திற்கும் இடைப்பட்ட (திரவமாகிய) கலப்பற்ற பாலை, அருந்துபவர்களுக்கு இனிமையானதாகத் தருகிறோம். (குர்ஆன் 16:66)
ஆகவே, பால் என்பது சாணத்திற்கும் இரத்த்திற்கும் இடையே உருவாகும் ஒரு பானம் என்பது தெளிவாகிறது.
மேலும் விபரங்கள் கீழ்கண்ட URL மூலம் அறிவியல் ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம்.

http://www.quranandscience.com/animals/162-milk-from-among-chyme-a-blood.html

2. தேன்

தேன் விஷயத்தில் நீண்ட கால நம்பிக்கை என்னவென்றால் பல பூக்களிலுருந்து தேனி தேனை எடுத்து வந்து தனது கூட்டில் வந்து சேர்க்கிறது. ஆனால் சமீபகால அறிவியல் உண்மை அதுவல்ல. இதோ குர்ஆன் வசனம்:

.... அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு பிணியாற்றுதல் (நோய் நிவாரணி) உண்டு. நிச்சயமாக சிந்தித்த்து உணரும் மக்களுக்கு இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. (குர்ஆன் 16:69)
ஆகவே தேன் என்பது, தேனியின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு பானம் என்பது அதனைப் படைத்தவனின் கூற்று.

மேலும் விபரங்கள் கீழ்கண்ட URL மூலம் அறிவியல் ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம்.
http://www.quranandscience.com/animals/64-the-honey-bee.html மற்றும் http://www.harunyahya.com/articles/14understanding01.php

3. கருவரையில் குழந்தை உருவாதல்

இந்ததுறையில் வல்லுனரான Professor Emeritus Keith L. Moore என்பவர் குர்ஆனில் கூறப்படும் கரு உருவாகும் முறை தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புக்களோடு ஒத்துப்போகின்றன என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள (மூலக்கூறுகளைக்) கொண்டு படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த விந்துத் துளியை இரத்தக் கட்டி என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை ஓர் தசைப் பிண்டம் ஆக்கினோம். பின்னர் அத்தசைபிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தைப் போர்த்தினோம். பின்னேர் நாம் அதை வேறு ஒரு படைப்பாக (முழு குழந்தையாக) செய்தோம். பாக்கியமுடையவன் அல்லாஹ். (அவனே) மிகச் சிறந்த (அழகிய) படைப்பாளன். (குர்ஆன் 23:12-14)

இந்த வசனங்களின் அறிவியல் ஆதாரங்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள URL ஐ சொடுக்கவும்.
http://www.quranandscience.com/human/142-professors-confirm.html மேலும்
http://www.creationofman.net/chapter1.html மேலும் http://www.harunyahya.com/creation.php

முடிவுரை:

குர்-ஆன்தான் உண்மையான கடைசி வேதம், அதை அருளியவன் தான் உண்மையான இறைவன் என்பதை உறுதிப்படுத்த இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. கீழே தரப்பட்டுள்ள URL மூலம் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

http://www.harunyahya.com
http://www.quranandscience.com

No comments:

Post a Comment