Saturday, December 26, 2009

நோயற்ற வாழ்வு வேண்டுமா?

மனி​தர்​கள் நோயி​லி​ருந்து விடு​ப​டு​வ​தற்கு மாத்​திரை,​ ஊசி போன்​ற​வற்​றை​யெல்​லாம் பயன்​ப​டுத்தி அந்த நோயி​லி​ருந்து விடு​பட பல முயற்​சி​களை மேற்​கொள்​கி​றார்​கள். இந்​தப் பொருள் இந்த நிலைக்கு நல்​லது அல்​லது கெட்​டது என்று தெரிந்​து​விட்​டால் நோயின் தாக்​கத்தி​லி​ருந்து பாது​காப்​புப் பெற​லாம். அந்த வகை​யில் ஆயுர்​வே​தத்​தில் ஏதே​னும் குறிப்​பு​கள் உள்​ள​னவா?​

​இதற்​கான விளக்​கம் அஷ்​டாங்க சங்​கி​ர​கம் எனும் ஆயுர்​வேத நூலில் கீழ்க்​கா​ணும் விதத்​தில் காணப்​ப​டு​கி​றது.

உயி​ர​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது பால்.

களைப்​பை நீக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது நீரா​டு​தல்.

உட​லைப் பருக்​கச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது மாமி​சம்.

தாதுக்​க​ளுக்கு ஊட்​ட​ம​ளித்து மகிழ்ச்​சி​யு​றச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தவை மாமி​சச் சூப்​பும்,​ மாம்​ப​ழச் சாறு​மா​கும்.

உண​வுக்கு சுவை​ய​ளிக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது உப்பு.

இத​யத்​திற்கு இன்​ப​ம​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது புளிப்​புச் சுவை.

உட​லுக்கு வலு​வைக் கூட்​டும் பொருட்​க​ளில் உயர்ந்​தது கோழி மாமி​சம்.

வாதம்,​ கபம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் உயர்ந்​தது எள்-​எண்​ணெய்.

வாதம்,​ பித்​தம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் மேலா​னது நெய்.

பித்​தம்,​ கபம் இவற்​றைத் தணி​யச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது தேன்.

உடலை உறு​திப்​ப​டுத்​தும் செயல்​க​ளில் சிறந்​தது உடற்​ப​யிற்சி.

உறக்​கம் தரும் பொருட்​க​ளில் மேலா​னது எரு​மைப் பால்.

சிறு​நீரை அதி​கம் தோற்​று​விக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது கரும்பு.

வயிற்​றில் அமி​லச் சுரப்பை தோற்​று​விப்​ப​வற்​றில் சிறந்​தது கொள்ளு.

பித் ​தம்,​ கபம் இவற்றை ஏற்​ப​டுத்​து​வ​தில் உளுந்து,​ எள்​ளு​டன் கலந்த கோதுமை மாவி​னால் செய்​யப்​பட்ட தின்​பண்​டம்,​ செம்​மறி ஆட்​டின் பால் இம்​மூன்​றும் முதன்​மை​யா​னவை.

ரத்​தக் கசிவை ஏற்​ப​டுத்​தும் ரத்​த​பித்​தம் என்ற நோயைக் கட்​டுப்​ப​டுத்​து​ப​வற்​றில் சிறந்​தது ​ ஆடா​தொடை.

இரு​ம​லைக் கட்​டுப்​ப​டுத்​து​வ​தில் சிறந்​தது கண்​டங்​கத்​திரி.

அப்​போ​து​தான் அடி​பட்ட உட்​கா​யங்​களை ஆற்​று​வ​தில் சிறந்​தது கொம்​ப​ரக்கு.

உட ​லு​ருக்கி நோயைப் போக்​கு​வ​தற்​கும்,​ தாய்ப்​பாலை வள​ரச் செய்​வ​தற்​கும் ரத்​தப்​போக்​கைத் தடுப்​ப​தற்​கும் சிறந்​தது வெள்​ளாட்​டின் பால்.

அதிக வாந்​தியை நிறுத்​து​வ​தில் சிறந்​தது நெல்​பொறி.

மூல​நோ​யை​யும்,​ வீக்​கத்​தை​யும் தணிக்​கச் செய்​வ​தி​லும் மேலா​னது மோர்.

உடல் நல​மின்​மை​யைத் தோற்​று​விப்​ப​ன​வற்​றில் சிறு​நீர்,​ மலம் போன்ற இயற்கை உந்​து​தல்​களை அடக்​கு​தல் முதன்​மை​யா​னது.

பற்​க​ளுக்கு உறு​தி​ய​ளிப்​ப​தி​லும்,​ சுவை​யூட்​டு​வ​தி​லும் நல்​லெண்​ணெய்க் கொப்​ப​ளித்​தல் சிறந்த வழி​யா​கும்.

எரிச்​ச​லைத் தணிக்​கச் செய்​யும் பூச்​சுப் பொருட்​க​ளில் உயர்ந்​தவை சந்​த​ன​மும் அத்​தி​யு​மா​கும்.

எரிச்​சல்,​ தோல்​வி​யாதி இவற்றை நீக்​கும் பூச்​சுப் பொருட்​க​ளில் விலா​மிச்ச வேரும்,​ வெட்டி வேரும் உயர்ந்​தவை.

கண், ​ ஆண்மை,​ கூந்​தல் வளர்ச்சி,​ குரல் வளம்,​ வலிவு உடல்​மி​னு​மி​னுப்பு,​ காய​மாற்​று​தல் இவற்​றிற்​குப் பயன்​ப​டுத்​தும் பொருட்​க​ளில் அதி​ம​து​ரம் சிறந்​தது.

தாதுக்​க​ளுக்​குப் பல​ம​ளித்து ஆயுளை நிலை​நி​றுத்​து​வ​தற்​குச் சிறந்த பொருள் நெல்​லிக்​கனி.

நீர்ச்​சு​ருக்கு,​ வாதத்​தைக் கண்​டித்​தல் இவற்​றிற்​குச் சிறந்​தது நெருஞ்​சில்.

நீரி​ழிவு நோயைக் கண்​டிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது மஞ்​சள்.

நோயா​ளி​க​ளுக்​குள்ள குணங்​க​ளுள் மேலா​னது மருத்​து​வர் சொற்​படி நடத்​தல்.

நோயை வளர்க்​கும் பொருட்​க​ளில் வருந்​து​தல் குறிப்​பி​டத்​தக்க கார​ண​மா​கும்.

சோம்​பலை வளர்ப்​ப​தில் தூக்​க​மும்,​ வலுவை உண்​டாக்​கு​வ​தில் அறு​சு​வை​யுள்ள அன்​னத்​தைப் பயன்​ப​டுத்​த​லும் கார​ண​மா​கும்.

அமை​தி​யான மன​நி​லையே கரு நிலைத்​தி​ருப்​ப​தற்​குக் கார​ண​மா​கும்.

பசித்​தீ​யைக் கெடுப்​ப​தில் மாறு​பட்ட உண​வும்,​ மாறு​பட்ட வேளை​க​ளில் உண்​ப​தும் முக்​கி​ய​மா​ன​வை​யா​கும்.

ஒரே இடத்​தில் அமர்ந்து உண்​பது,​ நன்​றா​கப் படுத்து உறங்​கு​தல்,​ உண்​ணும் உணவு நன்கு சீர​ண​ம​டை​யச் செய்​வ​தில் சிறந்​தன.​

​நன்றி:

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

No comments:

Post a Comment