Saturday, December 26, 2009

ரத்த சோகைக்கு ஆயுர்வேதம்

என் வயது 36. எந்​நே​ர​மும் உடல்​க​னம்,​ சோர்வு,​ இரு​மல்,​ சோம்​பல்,​ நாக்​கில் ருசி​யின்மை,​ தலைச்​சுற்​றல்,​ உடல் வீக்​கம்,​ நிறம் வெளுத்து,​ சோகை போன்ற உபா​தை​க​ளால் மாறி மாறி ​ அவ​திப்​ப​டு​கின்​றேன். இந்​நோய்க்​கான கார​ணம் என்ன?​ என்ன மருந்து சாப்​பி​டு​வது?​

ரத்த சோகை​யில் நீங்​கள் குறிப்​பி​டும் இந்த உபா​தை​கள் தென்​ப​டும். அதி​லும் குறிப்​பாக கப​தோ​ஷத்​தைத் தூண்​டி​வி​டும் உணவு வகை​க​ளான அதிக இனிப்பு,​ குளிர்ச்சி,​ எண்​ணெய்ப் பசை கொண்ட ​ பதார்த்​தங்​களை விரும்​பிச் சாப்​பி​டு​தல்,​ உட​லுக்​கும் மன​திற்​கும் அதிக உழைப்​பின்றி சோம்​ப​லான வாழ்க்​கை​முறை,​ பக​லில் படுத்து உறங்​கு​தல் போன்ற செயல்​க​ளா​லும் இந்த ரத்த சோகை ஏற்​ப​டு​கி​றது.

÷ம​னி​தர்​க​ளு​டைய மன​தில் ஏற்​ப​டும் பேராசை,​ கவலை,​ பயம்,​ கோபம்,​ வருத்​தம் போன்​ற​வற்​றின் தொடர் தாக்​கங்​க​ளால் இத​யப் பகு​தி​யில் அமைந்​துள்ள சாத​கம் எனும் பித்​தம் சீற்​ற​முற்று,​ வாயு​வி​னால் உந்​தப்​பட்டு,​ இத​யத்​தி​னோடு சேர்ந்​துள்ள பத்து குழாய்​க​ளின் வழி​யாக உட​லெங்​கும் பரவி,​ தோலுக்​கும் அதன் கீழே​யுள்ள தசைப்​ப​கு​திக்​கும் வந்து தஞ்​சம் அடை​கி​றது.

தஞ்​ச​ம​டைந்த இந்த பித்​த​மா​னது கபம்,​ வாயு,​ ரத்​தம்,​ தோல் மற்​றும் தசைப் பகு​தி​க​ளைக் கெடுத்து,​ பல​வித நிறங்​க​ளா​கிய வெளுப்பு,​ மஞ்​சள்,​ பச்சை போன்​ற​வற்றை தோலில் ஏற்​ப​டுத்​து​கின்​றது. இதற்கு சோகை அல்​லது பாண்டு என்று பெயர் என சர​கர் முனி​வர் தான் இயற்​றிய சர​க​ஸம்​ஹிதை எனும் நூலில் தெரி​விக்​கி​றார்.

* சோகை நோயி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ள தங்​க​ளுக்கு ரத்​தத்​தை​யும் அதன் அணுக்​க​ளை​யும் அதி​க​ரிக்​கும் நேரடி மருந்​து​க​ளால் பய​னே​தும் ஏற்​பட வாய்ப்​பில்லை. குடல் பகு​தி​யைச் சுத்​தப்​ப​டுத்​தும் வாந்தி மற்​றும் பேதி​மு​றை​களை முத​லில் செய்து கொள்ள வேண்​டும்.

அவற்​றைச் செய்​யும் முன் குட​லுக்கு எண்​ணெய்ப் பசை​யைத் தரும் ஆயுர்​வேத நெய் மருந்​து​க​ளா​கிய தாடி​மாதி கிரு​தம்,​ பஞ்​ச​கவ்ய கிரு​தம்,​ மஹா​திக்​தக கிரு​தம்,​ கல்​யா​ணக கிரு​தம் போன்​ற​வற்​றில் ஒன்​றைச் சிறிது சிறி​தா​கச் ​சாப்​பிட்டு அதன்​பின்​னர் குடல் சுத்தி முறை​க​ளைச் செய்​வது மிக​வும் நல்​லது.

* கு​டல் சுத்​திக்​குப் பிறகு,​ பழைய பச்​ச​ரி​சி​யு​டன் பார்லி,​ கோதுமை ரவை ஆகி​ய​வற்றை வேக​வைத்து,​ பச்​சைக் கொண்​டைக் கடலை,​ மஸý​ரப் பருப்பு வேக​வைத்த தண்​ணீ​ரு​டன் சேர்த்து ஆட்​டுக்​கால் மாமிச சூப்​பும் அத​னு​டன் வெது​வெ​துப்​பு​டன் சாப்​பிட வேண்​டும்.

ஆயுர்​வேத மருந்​தா​கிய நவா​யஸ சூர்​ணம் எனும் மருந்தை 2.5 கிராம் வீதம் எடுத்து 5மி.லி. பசு நெய்,​ 2.5 மி.லி. தேனு​டன் குழைத்து காலை,​ மாலை வெறும் வயிற்​றில் சாப்​பிட வேண்​டும். பசி நன்​றாக உள்ள நிலை​யில்,​ மண்​டூர வட​கம் எனும் மாத்​தி​ரையை மோரு​டன் சாப்​பிட்ட பிறகு,​ அது செரித்த பிறகு மேற்​கு​றிப்​பிட்ட பத்​திய உண​வைச் சாப்​பி​டு​வது மிக​வும் நல்​லது. உட​லில் ஏற்​ப​டும் வீக்​கம் வடி​வ​தற்கு புனர் நவ மண்​டூ​ரம் எனும் மாத்​தி​ரையை இரவு உண​விற்கு முன்,​ மோரு​டன் சாப்​பிட வேண்​டும்.

* நாட்​பட்ட சோகை நோய்,​ தோலில் ஏற்​ப​டும் கடும்

வறட்சி, ​ உடல் ​ வீக்​கம் நீடித்த நிலை​யி​லேயே இருத்​தல்,​ பார்​வைக்​குத் தென்​ப​டும் அனைத்​தும் மஞ்​சள் நிற​மா​கத் தென்​ப​டு​தல்,​ கடு​மை​யான மலச்​சிக்​க​லால் அவ​தி​யு​று​தல் அல்​லது பச்சை நிறத்​து​டன் பிசு​பி​சுப்​பாக மலம் கழி​தல்,​ உட​லில் கடு​மை​யான அசதி ஏற்​ப​டு​தல்,​ உடல் நிறம் வெள்​ளை​யாக இருத்​தல்,​ வாந்தி, ​மயக்​கம்,​ தண்​ணீர்,​ தாகம் கடு​மை​யாக இருத்​தல் போன்ற சோகை நோயின் அறி​கு​றி​கள் சிகிச்​சைக்கு வசப்​ப​டாது என்​ப​தைக் காட்​டு​கின்​றன.

* அ​த​னால் நீங்​கள் வெறும் டானிக், மருந்​து​கள் மூல​மா​க​வும்,​ ஊசி மருந்​து​கள் மூல​மா​க​வும் இந்​நோய்க்​கான தீர்வை நாடா​மல்,​ முன் குறிப்​பிட்​டுள்​ளது போல,​ குடல் பகு​தி​யைச் சுத்​த​மாக்கி,​ பசி​யைத் தூண்​டும் உணவு வகை​களை அன்​றா​டம் உண​வில் சேர்த்து,​ கல்​லீ​ரல் நன்​றாக வேலை செய்​யும் அள​விற்கு உடல் திறனை அடைந்​து​விட்​டால்,​ உங்​கள் உடல் விரை​வில் ஊட்​டம் அடைந்து நீங்​கள் குறிப்​பி​டும் உபா​தை​களி​லி​ருந்து விரை​வில் விடு​ப​ட​லாம்.​

நன்றி:

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

1 comment: