Saturday, December 26, 2009

கிறிஸ்துமஸ் பண்டிகை – ஒரு முஸ்லிமின் பார்வையில்

மேலை நாடுகளில் வாழும் ஒரு முஸ்லிமுக்கு, கிறிஸ்துமஸ் கால விடுமுறை என்றாலே அது ஒருவித மன அழுத்ததுடன்தான் கழிகிறது. ஏனெனில், விஷேச விடுமுறைகளைப் பற்றி நமது வித்தியாசமான பார்வையும் அதனைக் கொண்டாடும் விதமும்தான். இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமிய நாடுகளிலேயே அங்கு வாழும் நமது கிறிஸ்துவ நண்பர்களால் இந்தப் பிரச்சினை தவறாகவே புரிந்துகொள்ளப்படக்கூடும். பின் வரும் கட்டுரை இஸ்லாமிய நோக்கிலிருந்து இவ்விஷயத்தில் ஒரு நல்ல புரிதலை உண்டாக்க நான் எடுத்த ஒரு முயற்சியாகும்.


“கிறிஸ்து-மஸ்” என்ற வார்த்தை பழமையான ஆங்க்கிலத்திலிருந்து (Christ – Mass) உருவானது, அதாவது “கிறிஸ்துவினுடைய கூட்டம்”. இது இயேசு / ஈசா (ஸல்) பிறந்த 25 டிசம்பர் தேதி அவரது பிறப்பை கொண்டாடும் விழாவிற்கு வைக்கப்பட்ட பெயர். ஆனால் அவரது பிறந்த தேதியைப் பற்றிய சரியான தகவலும் இல்லை, அவர் பிறந்த ஆண்டைப்பற்றியும் சரியான தகவல் இல்லை. இதற்க்கான ஒரு முக்கிய காரணம் அவரைப்பற்றிய மத்தேயு மற்றும் லூக்காவினுடைய புதிய ஏற்பாடு நூல்கள், இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் அச்சம்பவங்களுக்கான சரியான தேதிகளைக் குறிப்பிடவில்லை.


தேதி பற்றிய சரியான தகவல் இல்லாத பட்சத்தில், ஏதாவது ஒரு தேதியைத் தேர்ந்த்தெடுக்க வேண்டியதாயிற்று. ஆகவே Eastern Orthodox மற்றும் Eastern Rite சர்ச்சுகள், ஜனவரி 6-ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தன. அந்நாளுக்கு “தோற்றம்”, என்று அர்த்தம் தரும் Epiphany என்றும் பெயரிட்டனர், (அதாவது இயேசு தோன்றிய நாள்). ரோமில் இருந்த மேற்கத்திய சர்ச்சு 25 டிசம்பரைத் தேர்ந்தெடுத்தது. மிகப்பழைமையான கிறிஸ்துவ நூல்களில் இருந்து. அதாவது கி.பி 336 களிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 அன்றுதான் கொண்டாடப்பட்டதாகத் தெரிய வருகிறது.

பரிசளிப்பது என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் ஒன்றிவிட்ட ஒரு பழைமையான ஒரு வழக்கம். ஒரு வகையில் இப்பழக்கம், கிறிஸ்துமஸ் பண்டிகையை விட பழமையான ஒன்று என்றே கூறலாம். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பரில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானம் ஆன போது, குறைந்த பட்சம் அதே மாதம் நிகழும் தமது ஆதிவாசிக் கொண்டாட்டங்களுக்குப் போட்டியாக (அல்லது அதைவிட சிறந்ததாக) இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

கிறிஸ்துவத்திற்கு முந்திய கால்த்தில், அதாவது ஆதிவாசி காலத்தில், குளிர் கால விழாக்களில் பச்சைகளும், வண்ண ஒளிகளும், மற்றும் நெருப்பும் பயன்படுத்தப்பட்டன. இவை குளிருக்கும் இருட்டுக்கும் மத்தியில் கதகதப்பையும் வாழ்க்கையையும் சித்தரிப்பதாகக் கருத்தப்பட்டன.. இதுபோன்றே பச்சை பசுமைகளும், மலர்வளையங்களும் வாழ்வின் அடையாளங்களாக எகிப்தியர்களாலும், சீனர்களாலும் மற்றும் ஹீப்ருக்களாலும் கருதப்பட்டன. கிறிஸ்துவ மதம் வருமுன்னர், மர வழிபாடு (மரத்தை வணங்குதல்) என்பது வடக்கு ஐரோப்பாவில் ஒரு பொது அம்சமாகவே இருந்து வந்தது.

உண்மையில், பல கிறிஸ்துவ அறிஞர்க்ள் இயேசு / ஈசா (ஸல்) அவர்கள் கோடை காலத்தில்தான் பிறந்ததாக நம்புகின்றனர். இக்கருத்து குர்ஆஎன் கூறும் அந்த “மேரியின் (மரியம்) மீது விழும் பழுத்த பேரீச்சம் பழங்களைப்” பற்றிக் கூறும் ஒரு குறிப்பிட்ட வசனத்துடன் ஒத்துபோகிறது.. அந்த வசனமாவது: “(ஓ மரியம்!), பேரீச்சம் மரத்தின் கிளையை உன்னை நோக்கி உலுக்குவாயாக. அது உன்மேல் நன்கு பழுத்த பேரீத்தம் பழங்களை கொட்டும்”. (குர்ஆன் 19:25)

பொதுவாகவே கிறிஸ்துவர்களின் பெரும்பாலான திருநாட்கள் எல்லாம் உண்மையில் அவரகளது ஆதி காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வந்தவைதாம் (அதாவது கிறித்துவம் ஐரோப்பாவிற்கு வருமுன்னர் இருந்த காலம்).

முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்குள்ள ஒரு தலையாய பிரச்சினை என்னவென்றால் கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் கொண்டாடலாமா அல்லது கொண்டாடக் கூடாதா என்பதுதான. அவர்களின் கிறிஸ்துவ நண்பர்கள் அப்பண்டிகையின் மதம் சாரா தன்மையினைச்சுட்டிகாட்டி, (அதனைக் கொண்டாடுவதால் கிடைக்கும் அங்கீகாரம்) சமூகத்துடன் ஒத்துப்போவதால் கிடைக்கும் மேம்பாடு பற்றி கூறுவர். அது போக, கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்பதையே மறந்து விடுமாறு என்னிடம் பல முறை கூறப்பட்டிருக்கிறது – அதுவும் குறிப்பாக அமெரிக்காவில்.

துரதிர்ஷ்டவசமாக, பல மேற்கத்தியர்கள் முஸ்லிம்க்ளாகிய நாமும் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்கு கிறிஸ்துவர் அல்லாத பலரின் உதாரணங்களையும் முன் வைக்கின்றனர், அதாவது கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் ஹிந்துக்கள் மற்றும் யூதர்கள். முஸ்லிம்கள் இந்த சமூக அழுத்ததிற்கு இணங்கி, வளைந்து கொடுக்காத தன்மையை அவர்கள் வெறுப்புடனேதான் காணுகின்றனர். ஆனால் அதே அளவுகோலை அவர்கள் தங்களுக்கே உபயோகிக்காதது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், நான் சமீபத்தில் கேள்விப்பட்டது என்னவென்றால் நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடாததை அவர்கள் அவமானமாகவே கருதுகிறார்களாம். இதற்காக நான் அவர்களைக் கேட்கிறேன்: இயேசு அவர்களோ அல்லது வேறு எந்த நபிகளோ தங்களுடைய பிறந்த நாட்களைகக் கொண்டாடினார்களா? பின்னார் எந்த ஆதாரத்தை அவர்கள் அடிப்படையாகக் கொள்ளுகிறார்கள்?

கண்டிப்பாக்ச் சொல்வதென்றால், முஸ்லிம்களுக்கு 2 திருநாட்கள் மட்டுமே உள்ளன. ஒன்று ரமலான் முடிவில் வரும் ஈதுல் பித்ர் மற்றொன்று ஹஜ்ஜின் முடிவில் வரும் தியாகத்திருநாள் ஈதுல் அல்ஹா. மேலும் நான் அழுத்தமாகக் கூறிக் கொள்வது என்னவென்றால் நாங்கள் எந்தப் பிறந்த நாட்களையும் கொண்டாடுவதிலை, அது எந்த நபியின் பிறந்த நாளாக இருக்கட்டும், எமது நபிகள் பெருமகனார் முஹம்மது அவர்கள் உட்பட. (அல்லாஹ் அவர்களை அனைவரையும் கண்ணியப்படுத்துவானாக).

கட்டுரை ஆசிரியர்: டாக்டர். ஜெய்த் மேறேன்கோவ் எம்.டி
(இஸ்லாம் வெப்பில் வெளியான ஆங்கிலக் கட்டுரையைச் சுருக்கி தமிழில் மொழிபெயர்த்தது: சாதிக்)

கிறிஸ்துமஸ் வாழ்த்துகக்கூறுவது பற்றி மார்க்க அறிஞர்கள்:

ஒரு முஸ்லிம் வாழ்த்துக்கள் கூறுவதாலேயே இறைவனை மறுத்தவனாக மாட்டான். ஆனால் ஒரு பாவத்தைச் செய்தவனாக ஆகும் வாய்ப்புண்டு. ஏனெனில், ஒரு கிறிஸ்தவர் இயேசுவை கடவுளின் குமாரர் என்று நம்புகிறார். அவருடைய திருநாள் அன்று அவருக்கு வாழ்த்துக் கூறுவதன் மூலம் நாம் அவர் நம்பிக்கைக்கு அங்கீகாரம் அளித்தவராகிறோம்.

முடிவுரை

ஆக மொத்தத்தில், ஐரோப்பியர்கள் தாங்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிய ஒரு குளிர்கால பண்டிகையைத்தான் கிறிஸ்துமஸ் என்ற பெயரில் தற்போது கொண்டாடி வருகிறார்கள். எனவே இயேசு கிறிஸ்துவை உண்மையில் மரியாதை செய்யும் எவரும் இதைக் கொண்டாடுவதற்கில்லை.

No comments:

Post a Comment